News
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பு தேசிய கொடியை ஏந்தியவாறு கூரையில் ஏறிய மகிந்தவின் ஆள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாளை (12) பொலன்னறுவையில் நடைபெறவிருக்கும் விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தேசிய கொடியை ஏந்தியவாறு இன்று நண்பகல் முதல் ஹிங்குராக்கொட வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் ரஜஎல கம், மின்னேரியைச் சேர்ந்தவராவார்.
வீட்டுவசதி மேம்பாட்டு பிரதி அமைச்சர் டி.பி. சரத்தின் கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிராந்தியத்தின் அரச நிறுவனங்களின் அதிகாரிகளை குறித்த மாநாட்டிற்குப் பங்கேற்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர லக்மால் பண்டார குறிப்பிட்டுள்ளார்.



