News

நீண்ட தூரம் பறக்கக்கூடிய ஜெட் விமானத்தை வைத்திருக்கும் முதல் இலங்கை பில்லியனர் !

தனிநரக நீண்ட தூர ஜெட் விமானத்திற்குச் சொந்தமான முதல் இலங்கையரான டாக்டர் ரோஷ் ஜலக்கே (Dr. Rosh Jalagge) தனது சொந்த ஜெட் விமானத்தில் ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வி கற்ற ரோஷ் ஜலக்கே, தற்போது ஆஸ்திரேலியாவில் சுகாதார சேவைகள் துறையுடன் தொடர்புடைய பல வணிகங்களுக்குச் சொந்தக்காரரான இலங்கை பில்லியனர் ஆவார்.

அவர் நாட்டிற்கு வந்துள்ள Gulf Stream G – V (கல்ஃப் ஸ்ட்ரீம் ஜி – வி) விமானமானது 12,000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கக்கூடியது ஆகும்.

இலங்கையின் முதல் தனிநரக விமானமான, 1980களில் உபாலி விஜயவர்தன அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட லியர் ஜெட் 35 ஏ (Lear Jet 35 A) விமானத்தால் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தது.

கட்டுநாயக்க – டி.கே.ஜி. கபில

Recent Articles

Back to top button