News

யாழில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ; அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டில் மீண்டும் இனவாத மற்றும் மதவாத அரசியலை முன்னெடுத்து மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் சிறு சம்பவங்களைக் கூட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.



திலீபன் சிலை தொடர்பான விவகாரத்தில், சிலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை யாழ்ப்பாண மாநகரசபையே மேற்கொள்ள வேண்டியிருந்தது.



மாநகரசபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாததன் காரணமாக, பொலிஸார் தமது சட்டரீதியான பொறுப்பின் அடிப்படையில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



“பொலிஸாருடைய வேலையைப் பொலிஸார் செய்திருக்க வேண்டும், மாநகரசபையினுடைய வேலையை மாநகரசபை செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டு விடயங்களும் தலைகீழாக நடைபெற்றுள்ளன. அதன் விளைவாகவே திலீபனின் சிலை அகற்றப்பட்டுள்ளது” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.



சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button