News

பௌத்த பிக்குகள் நடைபயணம் செய்து ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரியதற்காக மக்கள் ஆணைக்கு எதிராக எம்மால் செயல்பட முடியாது – ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது ; அமைச்சர்  லால்காந்த

சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் தொடர்பில், ஜனாதிபதியோ அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அரசாங்கமும் தமக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.



தற்போது நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நடைபயணத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது மக்கள் ஆணைக்கு முரணானதாக அமையும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் ஆணைக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ செயற்பட முடியாது என்றும் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button