News

பௌத்த மதத்தில் யானைகளுக்கு உள்ள இடத்தை நினைவு கூர்ந்து, உயிரிழந்த காவந்திஸ்ஸ யானைக்கு தனது உருக்கமான இறுதி அஞ்சலியை செலுத்தினார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் பிரபலமான யானையான ‘காவந்திஸ்ஸ’வுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.



“மாபெரும் வனத்தின் மன்னனான துவிரத கஜ காவந்திஸ்ஸவை, வனமே கடைசியாகத் தழுவியது என்று நான் நம்புகிறேன்” எனத் தனது பதிவை ஆரம்பித்துள்ள அவர், இலங்கையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பௌத்த மதத்தில் யானைகளுக்கு உள்ள சிறப்பிடத்தை நினைவுகூர்ந்துள்ளார்.



இலங்கை வரலாற்றில் யானைகள் முக்கிய பங்கு வகித்துள்ளதைக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, மகாவம்சம், ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹெரா, முடிசூட்டு விழாக்கள் மற்றும் போர்க்களங்கள் எனப் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களிலும் யானைகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.



அரசாட்சியின் அடையாளமாக விளங்கிய யானைகள், வரலாற்றில் மன்னர்களுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பௌத்த மதத்தில் யானைகளுக்கு உள்ள இடத்தையும் நினைவுகூர்ந்த அவர், இலங்கையின் கலாசாரம், மதம், கலை மற்றும் நாட்டுப்புற வாழ்வுடன் யானைகள் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.



பெருமை, வலிமை, பொறுமை மற்றும் கருணையின் அடையாளமாக விளங்கும் யானைகளைப் பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, யானை மன்னன் ‘காவந்திஸ்ஸ’வுக்கு தனது இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button