News

(சஜித்தின்) ஐக்கிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் தன்னை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக நாவலப்பிட்டி நகர சபை லொரி சாரதி பொலிஸில் முறைப்பாடு செய்தார்

நாவலப்பிட்டி நகர சபையின் குப்பை சேகரிக்கும் லொறி சாரதி தனக்கு ஐக்கிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது



சாரதியான மஞ்சுள பண்டார என்பவர்  தனது கடமையில் ஈடுபட்டிருந்தபோது நகரின் மத்தியில் வைத்து நாவலப்பிட்டி ஐக்கிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத்இ பஸ்பாகே கோரள பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நாவலப்பிட்டி நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் வேன் ஒன்றில் வந்து லொறியை வழிமறித்துத் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



வேனில் இருந்த ஒருவர் தம்மை நோக்கி துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதன் பின்னர் ஜெயதிலக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சென்று அங்கிருந்து தொகுதி அமைப்பாளர் தொலைபேசி ஊடாகத் தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.



தொகுதி அமைப்பாளர் தமக்கு இவ்வாறு அடிக்கடி கொலை மிரட்டல் விடுப்பதற்கான காரணமாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்ட விடயம் கடந்த தேர்தலில் பிரதேச சபையின் போனஸ் உறுப்பினர் பதவியை வழங்குவதற்காகத் தொகுதி அமைப்பாளர் தன்னிடம் 5 இலட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும்இ அதற்குத் தான் சம்மதிக்காததால் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button