News
பெட்ரோல் லீட்டருக்கு ரூ.145, டீசல் லீட்டருக்கு ரூ.128 வரி – சிபெட்கோ தலைவர்

விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒவ்வொரு லீட்டருக்கும் அரசாங்கம் அறவிடும் வரி தொடர்பான முக்கிய தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (Ceypetco) தலைவர் ஜனக ராஜகருணா வெளியிட்டுள்ளார்.
இதன்படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு ரூ.145 வரியும், ஒரு லீட்டர் டீசலுக்கு ரூ.128 வரியும் அரசாங்கத்தால் அறவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான குழு (COPF) முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின்போது, எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் அதன் செலவுக் கட்டமைப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலை கணக்கீட்டில் கடன் திருப்பிச் செலுத்துவதற்காக லீட்டருக்கு ரூ.50 ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



