News

“கப்பலிலிருந்து இறக்கும் விலைக்குக் கொடுத்தால் எரிபொருள் விலை இதைவிட அதிகரிக்கும்” – பிரதி அமைச்சர் டி.பி. சரத்

மக்கள் கூறுவது போல் கப்பலிலிருந்து இறக்கும் விலைக்கு எரிபொருளை வழங்கினால், தற்போதைய விலையை விட அதிகமான விலைக்கு எரிபொருளை வழங்க வேண்டியிருக்கும் என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தற்போது பில்லியன் கணக்கில் செலவு செய்தே மக்களுக்கு எரிபொருளை வழங்கி வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்குப் பெருமளவில் நிவாரணங்களை வழங்கி வருவதாகப் பிரதி அமைச்சர் டி.பி. சரத் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button