News

அரசாங்கம் பதவியேற்ற பின்னர் நாட்டிற்குக் கௌரவத்தையும் பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

நடப்பு அரசாங்கம் பதவியேற்ற பிறகு பல்வேறு சர்வதேச நிதி மற்றும் சமூகக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, நாட்டிற்குக் கௌரவத்தையும் பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது முறையான திட்டமிடலுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனாலேயாகும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், கடந்த நெருக்கடி நிலைக் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவந்து, தடையின்றி மின்சாரம், எரிபொருள், எரிவாயு மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான உரச் சலுகை ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியதாகச் சுட்டிக்காட்டினார்.

அந்த அடிப்படைத் தேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையான பொருளாதார மற்றும் அரச கொள்கைகள் காரணமாக, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல நிறுவனங்களின் அளவுகோல்களில் இலங்கை முன்னிலைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, சர்வதேச பிட்ச் (Fitch) கடன் தரவரிசையின்படி இந்நாட்டின் நிலை ‘CCC+’ மட்டத்திலிருந்து ‘B-‘ மட்டம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) நிறுவனத்தின் ‘ஊழல் உணதிறன் குறியீட்டில்’ (Corruption Perceptions Index) இலங்கை 14 இடங்கள் முன்னேறி 107 ஆவது இடத்தைத் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், உலக அமைதிக் குறியீட்டில் (Global Peace Index) 14 இடங்கள் முன்னேறி 67 ஆவது இடத்திற்கு உயர முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

இது தவிர, உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) அறிக்கைகளின்படி சுற்றுலாப் பொருளாதாரத்தில் துரித வளர்ச்சியை வெளிப்படுத்தும் உலகின் முதல் பத்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜனாதிபதி உட்பட பாராளுமன்றத்திலுள்ள 160 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டு வழிகாட்டலினாலேயே இந்த வெற்றிகள் ஈட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டினாலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்த முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

Recent Articles

Back to top button