News

ஒக்டோபர் மாதத்திகான பணவீக்கம் 8.5 % சதவீதமாக அதிகரிப்பு !!

ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு (NCPI) மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்தைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் 8.1% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க விகிதம், 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.5% ஆக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 6.9% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம், 2026 ஒக்டோபர் மாதத்தில் 7.2% ஆக உயர்ந்துள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2026 செப்டம்பர் மாதத்தில் 9.1% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதமும், 2026 ஒக்டோபர் மாதத்தில் 9.5% ஆக அதிகரித்துள்ளது.

Recent Articles

Back to top button