News
23 வயது மனைவியை கொ**ன்ற குற்றத்தில் 26 வயது கணவன் கைது – வாக்குவாதம் முற்றியதையடுத்து கணவனின் கை மீறி அசம்பாவிதம்

வாகரை, கதிரவெளிப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 23 வயதுடைய பெண்ணொருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, கணவர் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
.
சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



