News

நாடு மீண்டு வரும் அதேவேளை படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கார் இறக்குமதி, வரி மற்றும் வாட் வரி, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் இங்கு விவாதிக்கப்பட்டன.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை கருத்திற்கொண்டு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

வருமான வரிக்கு உட்படாத ஓய்வூதியதாரர்களுக்கு அறவிடப்படும் நிறுத்திவைப்பு வரிகளை மீள வழங்குவதற்கான இலகுவான செயற்பாடுகளை அமைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக பெறுமதி சேர் வரி (VAT) சேகரிப்பு செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, வரி இணக்கம் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் விரிவான டிஜிட்டல் முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார். செய்வேன் என்றும் கூறினார்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, நாடு மீண்டு வரும் அதேவேளையில் படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கப்படும் நன்மைகளை அதிகரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button