News

ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்தின் தொடர்ச்சியே திசைக்காட்டி முன்வைத்த வரவு செலவுத் திட்டம் ; வஜிர

திசைக்காட்டி வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்தின் தொடர்ச்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணிலின் வரவு செலவுத் திட்ட புத்தகத்தின் பின் அட்டையில் மட்டுமே அரசாங்கம் பெயரை மாற்றியுள்ளதாக திரு.அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் புதிய பிரேரணையில் க்ளீன் ஸ்ரீலங்கா மாத்திரமே இருப்பதாகவும்.சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளின் பிரகாரம் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு.வஜிர அபேவர்தன, வருமானத்தை ஈட்டும் பிரேரணைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் சுங்க வரி விதிப்பதற்கும் மட்டுமே முன்மொழிவு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு ரணில் நாட்டை ஆட்சி செய்யும் போது நாட்டின் வருமானம் நல்லதொரு நிலையை எட்டியிருந்ததை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த வஜிர

புதிய முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு அதிக அறிவு இல்லை என்பதை வரவு செலவுத் திட்டம் காட்டுவதாகவும் திரு வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button