News

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 வயதுடைய சிறுமி உயிரிழப்பு – வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

ஹெட்டிபொல – மகுலாகம பகுதியில் இன்று (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 வயதுடைய சிறுமி  உயிரிழந்துள்ளார். அவரது பாட்டி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமி ஹெட்டிபொல, மகுலாகம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இறந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, அருகில் இருந்த சிலர் பன்றிகளை வேட்டையாடும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பாட்டி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button