ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (UNA) வேட்பாளரால் திசைதிரும்பிய தேர்தல் களம்

“உள்ளுராட்சி மன்ற அதிகாரங்கள் சிலருக்கு பெரிய விடயங்களாக இருக்கலாம். எமக்கு இது எந்த விதத்திலும் பெரிதல்ல.. நாம் குறைந்தபட்ச சிறப்புரிமைகளுடன் வாழ்பவர்கள். நாளையே சாதாரணமாக ஊர் மக்களுடன் தற்போது போலவே எமக்கு வாழ முடியும். இதனை பரம்பரையாக பிடித்துக்கொண்டு தலைமுறையை தயார்படுத்தி இவற்றின் மீது பாரிய எதிர்பார்ப்புகளை வைத்து இவற்றை வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஆபரணங்களாக சூடிக்கொண்டு வாழ்பவர்களல்ல நாம். ஆகவே இதனை கைவிட வேண்டுமானால் எந்த சந்தர்ப்பத்திலும் கைவிடலாம்.
மரணத்தை எதிரில் வைத்துக்கொண்டே நாம் அரசியலுக்கு வந்தோம் எம்மை இந்த அரசியலுக்கு அழைத்து வந்த சகோதரர்கள் மரணித்துவிட்டார்கள் நாமும் மரணிக்கப்போகிறோம் இவற்றையெல்லாம் பார்த்தே நாம் அரசியலுக்கு வருகிறோம். எம்மீதான நம்பிக்கை எமது கடந்த காலத்திலேயே தங்கியுள்ளது. கடந்த காலம் என்பது எமக்கு அனுபவம்” என ஐக்கிய தேசிய கூட்டமைப்பினுடைய கடந்த பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் தற்போதைய பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை வேட்பாளருமாகிய உஸாமா மரிக்கார் அவர்கள் தெரிவித்தார் மேலும் கௌரவ யாசின் அவர்களின் வழிகாட்டலில் மதிப்பிற்குரிய ரவூப் ஹக்கீம் அவர்களின் ஒத்துழைப்புடன் உள்ளூர் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முடியுமானவரை அல்ல அதனை முடிக்கும் வரை முக்கிய கவணம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.



