News
மகிந்தவை சந்திக்க நேரில் சென்ற இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர்..

இலங்கைக்காக பலஸ்தீன் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஹாப் ஐ.எம்.கலீல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் பலஸ்தீன் ஆதரவு நிலைப்பட்டிற்காக நன்றி தெரிவித்து அவருக்கு நினைவு சின்னம் வழங்கி வைத்தார்.
முன்னாள் ஜனாதிபகி ராஜபக்ஷ பலஸ்தீனின் நீண்டகால ஆதரவாளரும்,பாலஸ்தீன்- இலங்கைக் நட்புறவு மன்ற ஸ்தாபக தலைவருமாவார்.மஹிந்த ராபக்ஷ பெயரில் பலஸ்தீனில் வீதி ஒன்றுக்கு பெயரிடப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய மாகாண முஸ்லிம் இணைப்பளர் ரிஷாத் மஹ்ரூப் அவர்களும் கலந்துகொண்டார்.
ஐ எம் சமத்.-



