News
பிரதேச சபைத் தலைவரை நியமிக்க வாக்களிக்க சென்ற NPP உறுப்பினர்கள் இருவர் கடத்தி செல்லப்பட்ட சம்பவம், வாக்கெடுப்பை தாமதப்படுத்த ஆளும் கட்சி ஆதரவாளர்களே செய்தது என SJB யினர் குற்றச்சாட்டு – வெலிகம பிரதேச சபையிலும் பதற்றம்.

வெலிகம பிரதேச சபைத் தலைவரை நியமிப்பதற்கான சபை கூட்டம் இன்று (27) நடைபெறவிருந்த நிலையில், வாக்களிக்க சென்று கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இரு உறுப்பினர்களும் திரும்பி வந்தால் மாத்திரமே இச்சபை நடவடிக்கை முன்னெடுக்க முடியுமென அங்கிருந்த சபை உறுப்பினர்கள் கோரியிருந்ததை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
வாக்கெடுப்பை தாமதப்படுத்த ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியதாக SJB குற்றம் சாட்டியுள்ளது.
அதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக பொலிஸாரை அழைக்க நடவகெ்கை எடுக்கப்பட்டுள்ளது.



