News

கண்டி – கொழும்பு பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் –  சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல்

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



எவ்வாறாயினும், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button