News

“உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும், எங்களுக்கு இன்னும் கிடைப்பது அதிக விலைக்கு ஆர்டர் செய்யப்பட்டவைதான்…”

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கை இன்னும் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளையே நுகர்வு செய்து வருவதால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கத்திற்கு தற்போது சாத்தியமில்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை விளக்குவதற்காக நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் எரிபொருளானது சில மாதங்களுக்கு முன்னர் கணிசமான அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார்.

“அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட அந்த எரிபொருள் இருப்புகள் தீரும் வரை உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலையை குறைக்கும் சாத்தியம் இல்லை.”

எவ்வாறாயினும், தற்போதுள்ள எரிபொருள் இருப்புகள் தீர்ந்து, குறைந்த விலைக்கு ஓடர் செய்யப்பட்ட புதிய எரிபொருள் இருப்புகள் நாட்டை வந்தடையத் தொடங்கிய பின்னர் எரிபொருள் விலையை திருத்தியமைக்க அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாட்டிற்கு வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டவையா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாநிதி பெர்னாண்டோ, உலக சந்தையில் விலை வீழ்ச்சியின் நன்மையை உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்குவதற்கு முன்னர், முன்-ஓடர்களின் (Pre-orders) கீழ் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளை நுகர்ந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

“குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் நுகர்வோரை சென்றடைவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் விலை குறையும் போது, தற்போது வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களை அதேபோன்று தொடர்வதா அல்லது எரிபொருள் விலையை மேலும் குறைப்பதா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button