News

நேற்று கண்டி- தெல்தெனிய பகுதியில் காரொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவ விசாரணையில் வெளியான நுவரெலிய விடுதி பின்னணி..

நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து (17) புதன்கிழமை மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .



தனது காதலனுடன் நுவரெலியாவிற்கு அண்மையில் வருகைதந்து தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் திடீரென்று (16) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த விடுதியிலிருந்து இரவு 10:30 மணியளவில் பெண்ணை தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றி செல்லும் செயல்களைச் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் .







இதனை தொடர்ந்து நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வெலிகம பகுதியை சேர்ந்த பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி (மருத்துவர், 33 வயது) மற்றும் கன்னொருவ பகுதியை சேர்ந்த அவரது காதலரான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க (35 வயது) ஆகியோரும் நுவரெலியாவிற்கு கடந்த (2026.06.03) அன்று நுவரெலியாவிற்கு வருகை தந்து குறித்த தனியார் விடுதியில் தங்கியிருந்தனர் எனவும் அதன் பின்னர் அவர்களுக்கிடையில் ஏதோனும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்து தங்கியிருந்த தனியார் விடுதியிலிந்து மீட்டு காரில் ஏற்றிச் சென்று கண்டி – தெல்தெனிய பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



எனினும் குறித்த பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்கு வருகைதந்த ஆண் சந்தக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .





மேலும் நுவரெலியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியில் சம்பவ இடத்திலுள்ள தடயங்கள் , சிசிடிவி (CCTV) காட்சிகள் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் பெற்று தொலைபேசி அழைப்புத் தரவுகளை சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button