News

நீதி அமைச்சரே.. நீங்கள் எத்தனை சிறைச்சாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளீர்கள்? இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளையும் லிஸ்ட் போட்ட சஜித்

“நான் நீதி அமைச்சர் ஹர்ஷண அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்,

நீங்கள் எத்தனை சிறைச்சாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டீர்கள்?


வெலிக்கடை, கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, நியூ மேகசின் ரிமாண்ட், மஹற, போகம்பரை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, நீர்கொழும்பு, திருகோணமலை, கேகாலை, களுத்துறை, குருவிட்ட, பொலன்னறுவை, மொனராகலை, வாரியப்பொல, வவுனியா, என எத்தனை சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்துள்ளீர்கள்?


எத்தனை சிறைச்சாலைகளுக்குச் சென்று தேடிப் பார்த்தீர்கள்? அங்குள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தீர்களா?


குறிப்பாக, எமது கட்சியின் உறுப்பினர்கள் குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு நீங்கள் எமக்குக் கூறுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய வேலையைச் சரியாகச் செய்தீர்களா? உங்களுடைய பொறுப்பை நிறைவேற்றினீர்களா?
இந்தச் சிறைச்சாலைத் தொகுதிக்குள் காணப்படுகின்ற அழுத்தமான சூழ்நிலைகள் குறித்து குறைந்த பட்சம் அச்சுறுத்தல் மதிப்பீடு (Threat assessment) ஒன்றையாவது செய்தீர்களா?

ஆபத்து மதிப்பீடு ஒன்றையாவது செய்தீர்களா? அப்படிச் செய்திருந்தால், அதனைச் சபையில் சமர்ப்பிக்குமாறு நான் முன்மொழிகிறேன். ஹன்சாட்டில் (Hansard) பதிவு செய்யுமாறு கூறுகிறேன்.


நெருக்கடி காலத் திட்டங்கள் (Contingency plans) இருந்தனவா? அதாவது தற்செயல் திட்டமிடல் என்று கூறுவது.


ஏனெனில், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையா? மாகற சிறைச்சாலையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?
பார்க்கப் போனால், நீங்கள் எதனையுமே புரிந்து கொள்ளவில்லை…”

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button