News

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 26 வாகனங்கள் காணாமல் போயுள்ளன – தேசிய காணக்காய்வு அலுவலகம் உறுதிப்படுத்தியது.

ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 26 வாகனங்களின் தற்போதைய இருப்பிடம் அல்லது பயன்பாட்டை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வாகனங்கள் காணாமல் போனது தொடர்பிலோ அல்லது அவை ஏதேனும் நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ வழங்கப்பட்டது தொடர்பிலோ எந்தவொரு எழுத்துப்பூர்வமான சாட்சியையும் தணிக்கைப் பிரிவிடம் அதிகாரிகளால் சமர்ப்பிக்க முடியவில்லை.

குறித்த 26 வாகனங்களைக் கண்டுபிடிப்பது மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஊடாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக கடந்த 2025 மே 28 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் தணிக்கைப் பிரிவிற்கு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், நடப்பாண்டு மார்ச் 19 ஆம் திகதியிட்ட நிலவரப்படி கூட அந்த வாகனங்களின் இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என தணிக்கை அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

Recent Articles

Back to top button