News

2019 இல் அதி திறமை சித்திகளுடன் பல்கலைக்கழகம் தேர்வாகிய நீர்கொழும்பு பலஹத்துறை அல்-பலாஹ் மாணவி பாத்திமா ரிஜினா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியாக…

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) அன்று பல்கலைக்கழக கலையரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

குறித்த பட்டமளிப்பு விழாவில் நீர்கொழும்பு பலஹத்துறையைச் சேர்ந்த மாணவி முஹம்மது ரிஸ்வி பாத்திமா ரிஜினா கலை மற்றும் கலாச்சார பீடத்தில் இளங்கலை பட்டதாரியாக (Bachelor Degree of Arts & Culture) பட்டம்பெற்றார்.

இம்மாணவி நீர்கொழும்பு பலஹத்துறை அல்-பலாஹ் கல்லுாரியில் 2019ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சிறப்பு சித்திகளுடன் பல்கலைக்கழகம் தேர்வாகி குறித்த ஆண்டிற்கான (2019) முதற்பட்டதாரியாகவும் மற்றும் பலஹத்துறை அல்-பலாஹ் கல்லூரியின் குறித்த ஆண்டிற்கான முழுமையாக பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த ஒரேயொரு பல்கலைக்கழகபட்டதாரியாகவும் திகழ்ந்திருக்கின்றார்.


எனவே இம்மாணவியின் கல்விப்பாதைக்கு உதவியாய் நின்ற பெற்றோர்,ஆசிரியர்கள்,குடும்பத்தார்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இம்மாணவியின்  சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

✍️ M.Fasihath

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button