News
செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து பாரிய அளவிலான மின்கல சக்தி சேமிப்பு அமைப்புகள் மூலம் மின்சாரம்
🔋⚡ செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து பாரிய அளவிலான மின்கல சக்தி சேமிப்பு அமைப்புகளை (Battery Energy Storage Systems) தேசிய மின்வழங்கல் கட்டமைப்போடு இணைக்க இலங்கை நடவடிக்கை.
பகல் நேரத்தில் உற்பத்தியாகும் மேலதிக சூரிய மின்சாரத்தை இந்த அமைப்புகள் சேமித்து வைத்து, இரவில் வெளியிடும்.
இது மின்வழங்கல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், டீசல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும்.
16 மின் விநியோக துணை மின்நிலையங்களில் இத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மின்கலத் திட்டமும் தேசிய மின்வழங்கல் கட்டமைப்புக்கு 10 மெகாவாட் (MW) மின்சாரத்தை வழங்கும் திறனைக் கொண்டிருக்கும். மேலும் 23 துணை மின்நிலையங்களில் இத்தகைய அமைப்புகளை நிறுவுவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



