News

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடியவர்கள் கைது

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.



விசாரணையின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோரே நகை திருடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



குறித்த காணொளியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற 2 பேர், மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலை கரைக்கு இழுத்துள்ளனர்.



பின்னர், அந்தப் பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த காதணிகளை அகற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடியிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.



இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் நேபாள பொலிஸார் மற்றும் பொதுமக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.



நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button