News

இலங்கையிலுள்ள பெண்களில் ஐந்தில் இருவர் வாழ்க்கைத் துணைவர்களால் ஏராளமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிப்பு

இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேபோன்று, இலங்கையிலுள்ள பெண்களில் நால்வரில் ஒருவர் 15 வயதிலிருந்தே சரீர மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.



08 மாவட்டங்களில் 888 பெண்கள் மற்றும் 109 பணியாளர்களூடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் அனுபவங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையில், இலங்கையில் பாலியல் மற்றும் ஆண் பெண் தன்மையின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு தீர்வுகாணும் சேவை கட்டமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



ஜனநாயகத்துக்கான தேசிய நிதியம், டியாகொனியா மற்றும் இலங்கையில் செயற்படும் விழுது அமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டது.



இந்த ஆய்வறிக்கையில் மேலும், துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்ணொருவர் அதுதொடர்பில் முறைப்பாடு செய்யும் சதவீதம் நூற்றுக்கு முப்பது சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல், பல்வேறு விபத்துகளுக்குள்ளாகுதல், வெட்கம், ஏற்புடைமை தொடர்பிலான பயம் மற்றும் விவாகரத்து மீதான பயம் காரணமாக அவர்கள் அந்த துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு தயங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், விழுது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்ரி ராஜசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘பல வருடங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பலனாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.



பெண்களின் வாழ்க்கையில் துன்புறுத்தல்கள் நிகழ்வதுடன் அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டதாக ராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.



உள்ளக மற்றும் வாழ்க்கை துணைகளினால் சாதாரணமாக ஏற்படும் துன்புறுத்தல்கள் சில சந்தர்ப்பங்களில் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு கடுமையான நிலைமைக்குள்ளாகி, அதற்கு பெண்களும் இசைவாக்கமடைவதாக ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.



இந்த ஆய்வறிக்கை பெண்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்டு ஆய்வு கருத்தாடல் மற்றும் நடைமுறை செயற்பாடுகளுக்கு பெரும் பங்களிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை, வெறும் வன்முறைகள் பற்றி மட்டும் தேடிப்பார்க்காமல் பிந்தைய உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் உயிர் காப்பாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும்போது இடம்பெறும் தோல்வியை அறிக்கையிட்டு பதிலளிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button