News

பணம் போதாது என்றால் ‘நாய் வரி’ யாவது விதிக்கலாம்.. – லால் காந்த

பிராந்திய சபை (உள்ளூராட்சி மன்றம்) ஒன்றின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லையெனில், தங்கள் அதிகாரப் பிரதேசத்திற்குள் நாய்களை வளர்க்கும் வீடுகளிலிருந்து நாய் வரி (Dog tax) வசூலித்தாவது பணத்தைச் சம்பாதிப்பதற்கு அந்த நிறுவனங்களுக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்று விவசாய, காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் லால் காந்த, உள்ளூராட்சி மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றப் பணம் போதாது எனத் தோன்றினால், சம்பந்தப்பட்ட பிராந்திய சபை எல்லைக்குள் நாய்களை வளர்க்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் நாய் வரி விதிக்க அந்தச் சபைகள் தீர்மானிக்க முடியும் என்று கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கும் சட்டப் பூர்வ அதிகாரம் எவ்வளவு என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “நான் இங்கு சொல்வது அந்த நிறுவனங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பற்றியது. அவர்களால் இதுபோன்ற முடிவுகளை எடுத்து வரிகளை வசூலிக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button