News
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்:46 குற்றச்சாட்டுகள்
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர சமகி ஜன பலவேகயவின் (SJB) நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுவுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



