News

இன்று காலை பத்தேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பான மேலதிக தகவல்கள் – போதைப் பொருள் தொடர்பில் கையொப்பமிடுவதற்காக குற்றவியல் பிரிவுக்கு சென்று வரும்போது துப்பாக்கி சூடு

பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரு பெண்களில் ஒருவர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காகக் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண், பத்தேகமவில் அமைந்துள்ள காலி குற்றவியல் விசாரணை பிரிவில் போதைப் பொருள் தொடர்பில் கையொப்பமிடுவதற்காகச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை வழிமறித்து டி-56 (T-56) ரக துப்பாக்கியால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button