News

NPP வாக்களித்த அனைவரும் “நாங்கள்தான் NPP வாக்களித்தோம்” என்று இன்று வீதியில் இறங்கி சத்தமிட்டுச் சொல்ல முடியும் !!

தற்போதைய ஆட்சியை அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாக்களித்த எந்தவொரு குடிமகனும் இன்று அது குறித்து வெட்கப்படவோ அல்லது மறைக்கவோ வேண்டிய எந்த காரணமும் இல்லை என்றும், தாம் மாலிமாவிற்காக நிற்பதாக பகிரங்கமாக தலைநிமிர்ந்து கூறுவதற்கான கௌரவத்தையும் பெருமையையும் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

“எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நல்லது” என்ற கருப்பொருளின் கீழ் கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த தேர்தலில் தமது கட்சி மீது சந்தேகம் கொண்டு வாக்களிக்காத மக்கள் கூட, அரசாங்கம் கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்திய சரியான கொள்கைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி முறையை கண்டு, “அடடா, அன்று வாக்களிக்காமல் விட்டோமே” என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் ஆட்சிக்கேறிய அரசாங்கங்கள் மீது மக்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் விரக்தியடைந்து, தாம் யாருக்கு வாக்களித்தோம் என்று கூடச் சொல்ல முடியாத அசிங்கமான நிலைக்குத் தள்ளப்பட்ட வரலாறு நாட்டில் இருந்தது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தற்போதைய ஆட்சி அந்த அரசியல் கலாச்சாரத்தை முற்றாக மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தன் மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களின் கௌரவத்தையும் ஜனநாயக உரிமையையும் பாதுகாத்து, நாட்டின் முன்னிருந்த பல முக்கிய சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அந்த மக்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்போம் என்றும் அவர் கூறினார்.

Recent Articles

Back to top button