தற்போது 8 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் அடுத்த ஆண்டு ஆரம்பம் வரை இவ்வாறே காணப்படும்.. ஆனால் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குப்பிறகு 5 சதவீதத்தை அடையும் ; மத்திய வங்கி

2027 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குப் பிறகே பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 8 சதவீதமாக இருக்கும் பணவீக்கம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலும் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
பணவீக்க உயர்வினால் ஏற்படும் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்காக, பணவியல் கொள்கை மற்றும் நிதியியல் கொள்கை உள்ளிட்ட கொள்கை ரீதியிலான கருவிகளைப் பயன்படுத்தி ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இத்தகைய நிச்சயமற்ற தன்மைகள் ஏற்பட்டால், பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க மத்திய வங்கியின் பணவியல் கொள்கையையும் அரசாங்கத்தின் நிதியியல் கொள்கையையும் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



