News

நாங்கள் இனியும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?  உலப்பனே ஸ்ரீசுமங்கள தேரர் ஆவேசமாக கேள்வி

இந்த அரசாங்கம் புலம்பெயர் சமூகத்தின் தேவைகளுக்கும் இந்தியத் தலையீட்டுடன் எமது புனித நகரங்களை அழிப்பதற்கு ஆரம்பித்துள்ளது.

அதனால் நாங்கள் இனியும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என உலப்பனே ஸ்ரீசுமங்கள தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.



எனவே இந்நாட்டிலுள்ள அனைத்துக் பிக்குகள் உட்பட நான்கு தரப்பு மக்களையும் விழிப்படையச் செய்து ஒன்றிணைத்து இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் மதச்சார்பற்ற மற்றும் பௌத்த எதிர்ப்புத் திட்டங்களுக்கு எதிராகச் செயற்படுவோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்துகிறோம்.



அதேபோல் ஞானசார தேரருக்காக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியுடன் தேவையான தலையீட்டை மேற்கொண்டுள்ளனர். அதனால் வாய்க்கு வந்தவாறு பேசும் இந்த சிறுபிள்ளைத்தனமான அமைச்சர்களின் அறிக்கைகளை விட ஜனாதிபதி மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஏதேனும் வாக்குறுதி அளித்திருப்பாரானால் அது குறித்து நாங்கள் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.



இதற்குள் அரசியல் விளையாட்டுகள் விளையாட நாங்கள் இடமளிக்க மாட்டோம். எனவே சாசனத்திற்குள் இருக்கும் சில தரப்பினரைத் தமது கருவிகளாகப் பயன்படுத்தி  தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடும்.



ஆனால் அது முழுச் சாசனத்தையும் பாதிக்கும் வகையில் நடப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.



எப்போதும் மதத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்து வந்த சந்தர்ப்பங்களில் மகா சங்கத்தினரே முன்னுக்கு வந்தனர். அதனால் நமக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



எனவே நாங்கள் அமைப்பாகத் திரண்டு இந்த அரசாங்கம் கொண்டுவரும் மதச்சார்பற்ற மற்றும் பௌத்த எதிர்ப்புத் திட்டங்களுக்கு எதிராகச் செயற்படுவோம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button