News

இன்று உருவாகும்  ‘அக்வான்’ புயல் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றி ஒரு பார்வை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. 

இது மேலும் வடக்கு, வடமேற்காக நகர்ந்து இன்று (நவ.16) புயலாக வலுவடையவுள்ளது.



இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘அக்வான்’ என்று பெயரிடப்பட உள்ளது. நாளை இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக நிலவக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.



இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் தொடங்கி மாலத்தீவு வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button