News

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு 🇱🇰 🇺🇸

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (17) நடைபெற்றது.



இதன்போது, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால இருதரவு உறவுகள் தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.



அத்துடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நலனளிக்கும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் மக்கள் மட்டத்திலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



இலங்கைக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.



மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button