News

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக ( முதல் மூன்று மாடிகளை நிர்மாணிப்பதற்காக) 600 மில்லியன் ரூபா இந்திய 🇮🇳 நிதியுதவி

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆறு மாடிக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
.
முன்மொழியப்பட்டுள்ள இக்கட்டடத்தின் முதல் மூன்று மாடிகளை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபா நிதியுதவியை நன்கொடையாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவொன்றும் அமைக்கப்படவுள்ளது.
.
மொத்தம் 8,640 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இக்கட்டடத்தை நான்கு வருடங்களுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
.
இப்புதிய கட்டடத் தொகுதியில் சிகிச்சை நிலையங்கள் (கிளினிக்குகள்), குறுகிய கால உள்நோயாளர் சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி மற்றும் நோயறிதல் மற்றும் ஆய்வுகூட வசதிகள் என்பன உள்ளடக்கப்படவுள்ளன.
.
இந்நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button