News

யாழ்ப்பாணம் மாவீரர் நினைவேந்தல் கண்காட்சியில் சிங்கள மற்றும் முஸ்லிம் பெயர்கள் உள்ளடக்கம் (உயிரிழந்த 28,341 விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகளில் சிங்கள மற்றும் முஸ்லிம் பெயர்கள் உள்ளடக்கம்)

யாழ்ப்பாணம் மாவீரர் வார நினைவேந்தல் கண்காட்சியில் சிங்கள மற்றும் முஸ்லிம் பெயர்கள் உள்ளடக்கம்
.
மாவீரர் வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, உயிரிழந்த 28,341 விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகள் யாழ்ப்பாணம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
.
நவம்பர் 21 ஆம் திகதி திலீபன் நினைவிடத்திற்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சியில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
.
இந்நினைவுப் பலகைகளில் இரண்டு சிங்கள நபர்களின் பெயர்களும் தனிப் பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி வரை இக்கண்காட்சி தொடரவுள்ளது.
.
2009 ஆம் ஆண்டு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படும் வரை தனித் தமிழ் ஈழத்திற்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கையில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே உள்ளது.
.
உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கு அனுமதி உள்ள போதிலும், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button