News

22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக நான் இருந்த போதிலும் NPP கட்சி என்னை விலக்கவில்லை – நானும் கட்சியில் இருந்து விலக மாட்டேன் ; லால் விஜேநாயக்க

22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாகக் கட்சியின் நிலப்பாட்டுக்கு முரணான நிலைப்பாடொன்றைக் கொண்டிருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி தம்மைக்கட்சியிலிருந்து நீக்கவில்லை என்றும், தாமும் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகப்போவதில்லை என்றும் அப்பக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், 22ஆவது திருத்தம் தொடர்பான தனது நிலப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்ந்தும் இணைந்து நிற்பதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.


22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாகக் கட்சியின் கருத்தும் தனது கருத்தும் ஒன்றுக்கொன்று முரணான நிலப்பாட்டை எட்டிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தம்மைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தி ஐலண்ட் (The Island) பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button