News

IMF ஒப்பந்தத்தைச் சரியாகச் செய்தது நாங்கள் மட்டும்தான்.. மற்ற நாடுகள் அதைப் பற்றி எங்களிடம் கேட்கின்றன..- பிமல்

இலங்கை வரலாற்றில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்த ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்,

சர்வதேச நாணய நிதியத்துடன் பயனுள்ள வகையில் செயற்பட தமது அரசாங்கத்திற்கு முடிந்தது, கட்சி மற்றும் அரசாங்கத்திடம் உள்ள வலுவான நிதிக் கட்டுப்பாடு காரணமாகும் எனக் குறிப்பிட்டார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த தருணத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குத் தமது அணியிடம் போதிய நிபுணத்துவம் இல்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியதை நினைவுகூர்ந்த அமைச்சர், அதற்காக மிகவும் திறமையான மற்றும் வலிமையான குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.

அதன் விளைவாக, வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தாலும் முடியாத வகையில், கௌரவமான அதேவேளை தொழில்முறை அணுகுமுறையின் ஊடாக குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது என அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பேணும் அதேவேளையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இலங்கைக்கு எவ்வாறு முடிந்தது என்பது குறித்து உலகின் ஏனைய இடதுசாரி நாடுகளின் தலைவர்கள் கூட விசாரித்ததாக அமைச்சர் ரத்நாயக்க இதன்போது வெளிப்படுத்தினார்.

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்து, நலன்புரி நன்மைகளை விரிவுபடுத்தி, அரச சொத்துக்களை விற்பதைத் தவிர்த்துக் கொண்டே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். இந்தச் சமநிலையைப் பேண எங்களுக்கு முடிந்தது எங்களிடம் உள்ள வலுவான நிதிக் கட்டுப்பாடு காரணமாகும்,” என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button